மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி அரசு ஊழியர் பலி

மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி அரசு ஊழியர் பலி

Update: 2023-05-06 19:19 GMT

தஞ்சையில் மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

அரசு ஊழியர்

தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி சோழன்நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 59). இவர் பட்டுக்கோட்டையில் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். தினமும் பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு தஞ்சைக்கு வருவது வழக்கம்.

நேற்று காலை தஞ்சையில் இருந்து மோட்டார்சைக்கிளில் பட்டுக்கோட்டைக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார். தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே திரும்பிய போது தஞ்சையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ்மோதியது.

பரிதாப சாவு

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரவிச்சந்திரனை, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மதியம் ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தஞ்சை நகர போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவ

Tags:    

மேலும் செய்திகள்