விபத்தில் காயம் அடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் காயம் அடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2023-01-11 11:08 GMT

ஆரணி

விபத்தில் காயம் அடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கலசபாக்கத்தை அடுத்த அரியாலை கிராமத்தைச் சேர்ந்த சின்ன பையன் மகன் சம்பத்து (வயது 27). இவர் கடந்த 2014-ம் ஆண்டு கலசபாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அரசு பஸ் மோதிய விபத்தில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்்தார். இதனை விசாரித்த சார்பு நீதிபதி தாவுதம்மாள், ரூ.7 லட்சத்து 30 ஆயிரத்தை 8 வாரத்துக்குள் சம்பத்துக்கு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் இழப்பீடு வழங்கப்படாததால் சம்பத்தின் வக்கீல்கள் பாலமூர்த்தி, வாசுதேவன் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இதனையடுத்து சார்பு நீதிபதி தாவுதம்மாள், வட்டியுடன் ரூ. 7 லட்சத்து 54 ஆயிரத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லை எனில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து நீதிமன்ற ஊழியர் ஆரணி பழைய பஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு ஆரணியில் இருந்து சென்னை செல்லக்கூடிய பஸ் நின்று கொண்டிருந்தது.

அந்த பஸ்சை ஜப்தி செய்வதற்கான நோட்டீஸ் ஓட்டப்பட்டது. பஸ்ஸில் ஆரணி இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய பயணிகள் அமர்ந்திருந்தால் அவர்கள் நோட்டீசை ஒட்டியுடன் பஸ்சில் இருந்து கீழே இறங்கி வேறு பஸ்சில் ஏறினர். அதன்பின் ஜப்தி செய்ய்பட்ட அரசு பஸ் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது


Tags:    

மேலும் செய்திகள்