அரசு கேபிள் டி.வி. சேவை பாதிப்பால் தனியாருக்கு மாறும் வாடிக்கையாளர்கள்

அரசு கேபிள் டி.வி. சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்கள் தனியாருக்கு மாறுவதாக ஆபரேட்டர்கள் புகார் மனு அளித்தனர்.

Update: 2022-11-22 18:36 GMT

வேலூர் மாவட்ட உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் அனைவரும் அரசு கேபிள் டி.வி. இணைப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். கடந்த 19-ந்தேதி முதல் மென்பொருள் சேவை பாதிப்பினால் சிக்னல் கட்டாகி விட்டது. தற்போது வரை இணைப்பு சரியாகவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தனியார் சேவைகளுக்கு மாறி விடுகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தாதாரர்களுக்கும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் வாடிக்கையாளர் இழப்பினை தடுக்க எங்களுக்கு அரசு சார்பில் மாத சந்தா தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்