செஞ்சி அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; டிரைவர் பலி கண்டக்டர் உள்பட 4 பேர் படுகாயம்

செஞ்சி அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். கண்டக்டர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-08-24 15:18 GMT

செஞ்சி, 

சென்னையில் இருந்து அரசு பஸ் பயணிகளுடன் நேற்று  இரவு திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டது. பஸ்சை செஞ்சி கட்டபொம்மன் தெருவை சேர்ந்த விநாயகம் (வயது 55) என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை வனச்சரக அலுவலகம் அருகே சென்றபோது, திடீரென ஆக்சிலேட்டர் உடைந்து போனது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடியபடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பஸ் கண்டக்டர் கிருபாகரன் (50) மற்றும் 3 பயணிகள் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். மேலும் இந்த விபத்து குறித்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே விபத்துக்குள்ளான அரசு பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்