அரசு பஸ் பள்ளத்தில் இறங்கி விபத்து; பயணிகள் உயிர் தப்பினர்

அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியதில் ஏற்பட்ட விபத்தில் பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2022-12-28 17:51 GMT

மதுரையில் இருந்து திருச்சிக்கு 38 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கல்லுப்பட்டி அருகே சென்றபோது அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் மேம்பாலத்திற்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லி கற்களின் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதில் 10 பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் ஆம்புலன்சிலேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனைத்தொடர்ந்து பயணிகள் மாற்றுப் பஸ்சில் திருச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்