அரசு கலைக்கல்லூரி மாணவர் முதலிடம்

அரசு கலைக்கல்லூரி மாணவர் முதலிடம்

Update: 2023-02-22 18:45 GMT

ஊட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நீலகிரி மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், ஊட்டியில் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் ஊட்டி தனியார் பள்ளியில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கான கல்லூரி பிரிவில் 100 மீட்டர் (பிரி ஸ்டைல்) போட்டியில், முதல் பரிசை ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர் கபுலேஷ் பெற்றார். அதே கல்லூரியை சேர்ந்த லோகேஷ், 2-ம் இடமும், தனியார் கல்லூரி மாணவர் ஹரி 3-ம் இடமும் பிடித்தனர்.

அண்ணா உள் விளையாட்டு அரங்கில் அரசு ஊழியர்கள் பிரிவில் சதுரங்க போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 55 பேர் பங்கேற்றுள்ளனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்