அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்

திருமருகலில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-07-26 17:54 GMT

திட்டச்சேரி:

திருமருகலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 38-வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது.மாநாட்டிற்கு மாநாட்டு தலைவர் தங்கையன் தலைமை தாங்கினார்.மாநாட்டு செயலாளர் தமிழரசன், பொருளாளர் மாசிலாமணி, துணைத் தலைவர் ரமேஷ், துணை செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பாபுஜி வரவேற்றார். செல்வராசு எம்.பி., மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பேசினர்.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-திருமருகலை தனித்தாலுகாவாக அறிவிக்க வேண்டும். திருமருகலில் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். திருமருகலில் கலை அறிவியல் கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்.திருமருகலில் அரசு பஸ் நிலையம் மற்றும் வளாகம் அமைத்திட வேண்டும். விவசாயிகளுக்கு பாகுபாடின்றி குறுவை தொகுப்பு வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்