கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்வேலைவாய்ப்பு மன்ற கருத்தரங்கு

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு மன்ற கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2023-02-09 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் வேலைவாய்ப்பு மன்றமும், சிவந்தி அகாடமியும் இணைந்து இளநிலை 3-ம் ஆண்டு மாணவிகளுக்கு போட்டி தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின.

கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். கல்லூரி ெசயலர் எஸ்.நாராயணராஜன் தொடக்க உரை நிகழ்த்தினார். சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரான்சிஹ் ரெஜீலா வரவேற்று பேசினார். நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலக முதுநிலை ஆய்வாளர் ஆர்.கே.ரமேஷ் ராமலிங்கம் கலந்து கொண்டு போட்டித் தேர்வுகள், அதற்கான கால அட்டவனை, கல்வித் தகுதிகள் மற்றும் வயது வரம்பு போன்றவற்றை மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.

இது போட்டி தேர்வுகளுக்கு 3-ம் மாணவிகள், தங்களை தயார்படுத்தி கொள்ள கருத்தரங்கு உதவியாக இருந்தது. வணிகநிர்வாகவியல் துறை பேராசிரியை எஸ்.செல்லபிரியா நன்றி கூறினார். கருத்தரங்க ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி வழிகாட்டுதல்படி வேலைவாய்ப்புத்துறை ஒருங்கிணைப்பாளர் கா.ராதிகா மற்றும் மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

மேலும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் காந்திய சிந்தனை மன்றம் சார்பாக சிறப்பு கூட்டம் கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைைமயில் நடைபெற்றது. வணிகவியல் துறை உதவி பேராசிரியை ரா.பவானி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பேசுகையில், மாணவிகள் ஏட்டுக் கல்வியோடு நின்று விடாமல், அனைத்து துறைகளிலும் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அத்திறமைகளை மாணவிகள் வளர்த்து கொண்டு சாதிக்க வேண்டும், என்றார். மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டது. பேச்சு போட்டியில் மாணவி மரிய சிபாட்டினி முதல் பரிசையும், சுபாஷினி 2-வது பரிசையும், சங்கர கிருத்திகா 3-வது பரிசையும் பெற்றனர்.

கவிைத போட்டியில் ராதிகா முதல் பரிசையும், நிஷா 2-வது பரிசையும், நித்தியபாலா 3-வது பரிைசயும் பெற்றனர். இந்த மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

கூட்ட ஏற்பாடுகளை காந்திய சிந்தனை மன்ற பொறுப்பாளர்கள் ரா.பவானி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை பா.திருமகள் ஆகியோர் ெசய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்