கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்பொருளியல் மன்ற கூட்டம்

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பொருளியல் மன்ற கூட்டம் நடந்தது.

Update: 2023-02-27 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பொருளியல் துறை சார்பாக பொருளியல் மன்ற கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வணிகவியல் துறை துணை பேராசிரியை இரா.பவானி கலந்துகொண்டு "மத்திய அரசின் நடுநிலை அறிக்கை 2023-2024" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நடுநிலை அறிக்கையில் ஒவ்வொரு துறையி்ன் செயல்பாடுகளையும், ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, என்னென்ன மூலங்கள் மூலமாக பெறும் வருமானம் மற்றும் பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் டிஜிட்டல் கரன்சி, கிரிப்டோ கரன்சி மூலமான இணைய பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படுவதையும் பற்றி சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து மாணவிகளிடையே கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறை தலைவர் ஆ.ஜெயந்தி வழிகாட்டுதலின்படி பேராசிரியைகள் கவிதா, பால்தங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்