கவர்னர் தேநீர் விருந்து : புறக்கணிப்பதாக தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

சுதந்திரதின விழாவையொட்டி கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க. வின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

Update: 2024-08-13 06:06 GMT

சென்னை,

நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, கவர்னர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைக்க  உள்ளார்  இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, தி.மு.க., அ.தி.மு.க. , காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், சுதந்திரதின விழாவையொட்டி கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. அதன்படி , கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க.  ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்