கவர்னர் மாளிகையா? ஆர்.எஸ்.எஸ் அலுவலகமா? தொல் திருமாவளவன் காட்டம்
அமைச்சர்களின் துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமைச்சர்களின் துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில், 'அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகித்து வந்த துறைகளை இரு வேறு அமைச்சர்களிடம் ஒப்படைப்பதற்காக ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்காகும்.
அமைச்சர்கள் யார் யார்? அவர்களுக்கு என்னென்ன துறைகள்? என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு. இதில் ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்கிற அய்யம் எழுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.