அரசியல்வாதியாக கவர்னர் மாறிவிட்டார்-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

அரசியல்வாதியாக கவர்னர் மாறிவிட்டார் என அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு தெரிவித்தார்.

Update: 2023-04-07 18:43 GMT

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கவர்னரின் பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவான பதிலை தெரிவித்திருக்கிறார். கவர்னர் இவ்வாறு பேசியிருக்கக்கூடாது. கவர்னர் ஒரு அரசியல்வாதியாக மாறிவிட்டார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் கவர்னர் முடிவுக்கு மக்கள் தீர்ப்பளிப்பார்கள், என்றார். தொடர்ந்து கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்படுமா? என அமைச்சரிடம் நிருபர்கள் கேட்டபோது, தமிழ்நாடு பொறுமையாக செல்லக்கூடிய மாநிலம். கருத்து மோதல் ஏற்பட்டாலும் அதனையெல்லாம் அனுசரித்து செல்லக்கூடியது. கவர்னர் விஷயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தெளிவான முடிவை எடுப்பார், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்