கவர்னர் ஜனநாயக கடமையை மட்டும் செய்ய வேண்டும்

கவர்னர் ஜனநாயக கடமையை மட்டும் செய்ய வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

Update: 2022-12-06 21:42 GMT

திருவட்டார்:

கவர்னர் ஜனநாயக கடமையை மட்டும் செய்ய வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

சீரமைப்பு பணி

திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட மீன் சந்தை வளாகத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சத்தில் மீன்சந்தை சீரமைப்பு பணியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மகாராஜன் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயக கடமை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அத்துமீறும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக முதல்-அமைச்சருக்கு தைரியம் கொடுக்க தயார் என்ற சசிகலாவின் பேச்சை பொறுத்தவரையில் யாருக்கு யார் தைரியம்கொடுப்பது என எண்ண வேண்டியுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரையில் யாரும் அவருக்கு தைரியம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

தமிழக கவர்னர் தனது ஜனநாயக கடமையை மட்டும் செய்யவேண்டும் அதைமீறி அவர் செயல்படுவதை கண்டித்து வருகிறோம்.

தி.மு.க. மாநில சுயாட்சி மற்றும் மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. மாநிலத்தின் வருவாய் பங்களிப்பை முறையாக விடுவிக்கவில்லை.

சாதாரண விஷயம்

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் சின்னசின்ன பிரச்சினைகள் இருந்து வருகிறது இது சாதாரண விஷயம்தான்.

45 ஆண்டு காலமாக முடிக்காத பிரச்சினைகளை தி.மு.க ஆட்சி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. நான்கு வழிச்சாலை பணியை கிடப்பில் போட்டார்கள். அதை மீண்டும் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருவட்டார் பேரூராட்சி துணத்தலைவர் சுந்தர்ராஜ், திருவட்டார் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜாண் பிரைட், திருவட்டார் ஒன்றிய தி.மு.க. பொருளாளர் ரமேஷ், காட்டாத்துறை கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் டேனியல், குமரி மேற்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திலீப் குமார், ஒப்பந்தக்காரர் பென்ராஜா சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்