நாகை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி வழிபாடு

கவர்னர் வருகையையொட்டி நாகை மாவட்டத்தில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2024-01-28 12:05 GMT

நாகை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று நாகை சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு இல்லம் சென்றார். கீழ்வெண்மணியில் கடந்த 1968-ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டடிபட்டு உயிர் பிழைத்த தியாகி பழனிவேலை சந்தித்து பேசினார்.

அதனைத்தொடர்ந்து வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தார். அதன்பின்னர் நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு சென்று மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார். கவர்னர் வருகையையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்