எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், "எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்யமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.