நெல்லை வந்த கவர்னர் ஆர்.என்.ரவி; கலெக்டர் கார்த்திகேயன் வரவேற்றார்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக நெல்லை வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வரவேற்றார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு நெல்லை வந்தார். அவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். முன்னதாக அவரை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கவர்னரை வரவேற்றனர்.