விழுப்புரம் சிவலோகநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
விழுப்புரம் சிவலோகநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திருமுண்டீச்சரத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலோகநாதர் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ராவி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கோவிலில் உள்ள வான்சாஸ்திரம் குறித்த கல்வெட்டுகளை கவர்னர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார். வான்சாஸ்திர கல்வெட்டு குறித்து ஆய்வாளர்கள் கூறிய விளக்கங்களை கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டறிந்தார். கவர்னரின் வருகையையொட்டி கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.