12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
சென்னை,
சென்னை ஆளுநர் மாளிகையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். அப்போது பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கௌரவித்தார். அதன் பின்னர் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும். சட்டம் படிக்க விரும்புபவர்கள் சிறப்பான சட்டப் பள்ளியை தேர்வு செய்ய வேண்டும். தொலைபேசியை மாணவர்கள் கட்டுப்பாடுடன் பயன்படுத்த வேண்டும். இலக்கை அடைவதில் மாணவர்களுக்கு தெளிவு இருக்க வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுறித்தினார்.