நாகாலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு வரவேற்பு
தூத்துக்குடயில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலையில் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன், ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், வீரமணி, மாதவன் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் அவர் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார்.
அதே விமானத்தில் மொரிசியஸ் நாட்டு அதிபர் பிருத்திவிராஜ் சிங்கும் தூத்துக்குடி வந்தார். பின்னர் அவர் நெல்லையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றார்.