கவர்னர் உருவப்பொம்மை எரிப்பு

தேனியில், கவர்னரின் உருவப்பொம்மையை எரித்த தமிழ்ப்புலிகள் கட்சியினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-11 16:47 GMT

தேனி நேரு சிலை சிக்னல் அருகில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து அவருடைய உருவப்பொம்மையை எரிக்கப் போவதாக தகவல் பரவியது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் கையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் உருவப்பொம்மையை எடுத்து வந்தனர். அதை சாலையில் கிடத்தி அதன் மேல் தீ வைத்தனர். போலீசார் அணைக்க முயன்றபோது உருவப்பொம்மையை சிறிது தூரம் இழுத்துச் சென்றனர். அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காலால் மிதித்து தீயை அணைத்தார். பின்னர் அவர்களிடம் இருந்து உருவப்பொம்மையை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது அவர்கள் கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட துணை செயலாளர் மாரி உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம், தேனியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்