கொடைக்கானலில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மதியம் 1 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தார். அவரது வருகையையொட்டி மதுரை விமான நிலைய பகுதிகள் மற்றும் அவர் செல்லும் வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவர் விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு கொடைக்கானல் சென்றார்.