கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் தமிழக கவர்னரின் கருத்து கண்டிக்கத்தக்கது தர்மபுரியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் தமிழக கவர்னரின் கருத்து கண்டிக்கத்தக்கது தர்மபுரியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

Update: 2022-10-30 18:45 GMT

கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் தமிழக கவர்னரின் கருத்து கண்டிக்கத்தக்கது என தர்மபுரியில் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

செயல்வீரர்கள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. மாநில துணைத்தலைவரும், தர்மபுரி மாவட்ட பொறுப்பாளருமான தீர்த்தராமன் தலைமை தாங்கினார். மாநிலச்செயலாளர் பாஸ்கர், செங்கம் குமார், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் நரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார். பின்னர் ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை பாதயாத்திரை நினைவாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 100 கொடிக்கம்பங்கள் நிறுவும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்ததுடன், தர்மபுரி காமராஜர் சிலை, காந்தி சிலை, அதியமான் கோட்டை, தர்மபுரி புரோக்கர் அலுவலகம் ஆகிய இடங்களில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் வடிவேல், வேடியப்பன், செந்தில், சுகர் சக்திவேல், வட்டார தலைவர்கள் மணி, ஞானசேகர், காமராஜ், வேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி குமரவேல் நன்றி கூறினார்.

கண்டிக்கத்தக்கது

இதையடுத்து கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக கவர்னர் மோசமான கருத்தை தெரிவித்தார். தமிழக போலீசார், என்.ஐ.ஏ. சேர்ந்து தான் கார் வெடிப்பு விவகாரத்தை விசாரிக்கின்றனர். இந்த விவகாரத்தில் கவர்னர் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஒரு கருத்தை சொல்லியிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கடலூர் மாவட்டத்திற்கு சென்றபோது உள்ளூர் அமைச்சரை தரக்குறைவாக பேசியுள்ளார். இது அரசியலுக்கு அழகு இல்லை. அரசியல் காரணங்களுக்காக அண்ணாமலை போலீசாரை குறை சொல்லுவது தவறு. இந்தியை திணிக்கக்கூடாது. மத்திய அரசு ஊழியர்கள் பெறுகிற அனைத்து பலன்களையும், சலுகைகளையும் மாநில அரசு ஊழியர்களும் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்