சொந்த மக்களை அரசே சுரண்டக்கூடாது: சென்னை ஐகோர்ட்டு
அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை,
கோவை மாநகராட்சியில் ஓட்டுநர்களாக நியமிக்கக் கோரி தூய்மை பணியாளர்கள் ஜெயபால், மாரிமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு இந்த கருத்தைப் பதிவு செய்துள்ளது.
தூய்மைப் பணியாளர்களை அதிக வருமானம் உள்ள ஓட்டுநராகப் பயன்படுத்தியது, சொந்த மக்களை அரசே சுரண்டுவதற்கு ஒப்பானது. அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெயபால் மற்றும் மாரிமுத்து ஆகியோர் தொடர்ந்த மனுவில், கல்வித் தகுதியை காரணம் காட்டி தங்களை ஓட்டுநராக நியமிக்க அரசு மறுப்பதாகவும், கோவை மாநகராட்சி, குறைந்த ஊதியம் உள்ள தூய்மைப் பணியாளர்களான தங்களை ஓட்டுநர்களாகப் பயன்படுத்திவிட்டு, கல்வித் தகுதியை காரணம் காட்டி ஓட்டுநர்களாக நியமிக்க அரசு மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.