அரசு ஊழியர் மாயம்

அரசு ஊழியர் மாயமானார்

Update: 2023-09-04 01:04 GMT

பேரையூர், 

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உலைப்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 59). இவர் டி. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 30-ந் தேதி வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். மீண்டும் பணி முடிந்து வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மகாலிங்கம் மனைவி ஜெயலட்சுமி டி. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விசாரித்த போது, அங்கிருந்தவர்கள் காலையில் வேலைக்கு வந்துவிட்டு மீண்டும் மாலையில் சென்றதாக கூறினார்கள். இதுகுறித்து ஜெயலட்சுமி டி.கல்லுப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்