கார் மோதி அரசு ஊழியர் பலி

கார் மோதி அரசு ஊழியர் பலியானார்.

Update: 2023-09-05 20:46 GMT

காரியாபட்டி, 

திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 53). இவர் விருதுநகர் மாவட்ட உள்ளாட்சி நிதி தணிக்கையின் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் இவர் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பணி சம்பந்தமாக தனது மோட்டார் சைக்கிளில் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தோணுகால் பகுதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்லை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது நண்பர்களுடன் திருச்செந்தூர் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு நாமக்கல் செல்வதற்காக அதே சாலையில் காரில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கார், முருகானந்தம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்