அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-17 19:39 GMT

அரிமளம் பாண்டியன் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (வயது 37). இவர், அறந்தாங்கியில் கலால் துறையில் பணி புரிந்து வந்தார். சுரேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்னர் சுரேஷின் மனைவி கோபித்துக் கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் சுரேஷ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று நீண்ட நேரம் ஆகியும் சுரேஷ் வீட்டின் கதவுகள் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், சுரேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது வீட்டில் சுரேஷ் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரிமளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுேரஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்