தஞ்சை அருகே உள்ள அம்மாப்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 50). கடந்த 30 ஆண்டுகளாக இவர் தஞ்சை அருகே உள்ள குருங்குளம் சர்க்கரை ஆலையில் அலுவலக டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் அம்மாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து ரவி குருங்குளத்தில் உள்ள அவருடைய அலுவலகத்திற்கு வேலைக்கு வந்துள்ளார். பின்னர் ரவி அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசு குடியிருப்பிற்கு சென்றுள்ளார். அங்கு ரவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ரவி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அரசு குடியிருப்பு வளாகத்திற்கு வந்து ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரவியின் மனைவி உஷா ( 43) கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.