தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று அசத்தல்
தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் திருத்தணி அரசு பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றுள்ளனர்.;
யூத் இந்தியா கல்வி மேம்பாட்டு விளையாட்டு கழகம் சார்பில் டெல்லி ஆக்ராவில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் புகழேந்தி, மணிகண்டன், லியோ, மாசூரியநாராயணன் ஆகிய 4 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் புகழேந்தி தடகளத்தில் 2 தங்க பதக்கமும், மணிகண்டன் யோகாவில் தங்கப்பதக்கம், லியோ, மாசூரியநாராயணன் ஆகிய இருவரும் இரட்டையர் பிரிவில் இறகு பந்தில் தங்கப்பதக்கம் வென்றனர். வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம், மேலாண்மை குழு தலைவர் ஞானபிரகாசம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் 17 மாநிலங்களைச் சேர்ந்த 536 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழக அணியின் சார்பில் 11 தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். இதில் திருத்தணி அரசு பள்ளி மாணவர்கள் 4 தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.