தருமபுரி மாவட்ட தடகள போட்டி: தித்தியோப்பனஅள்ளி அரசு பள்ளி மாணவிகள் சாதனை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் பங்கேற்ற பென்னாகரம் ஒன்றியம் தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்துள்ளனர். 16 வயதுக்குட்பட்ட பெண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்த பள்ளியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி நவ்யா 3-வது இடமும், 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஹரிணி 3-வது இடமும் பிடித்துள்ளனர். இந்த சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், பயிற்சியாளர்கள் ராமன், லட்சுமணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.