ஓசூர் அருகேஅரசு பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

ஓசூர் அருகே அரசு பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-10-16 19:00 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே அரசு பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேபள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. பள்ளியில் 6 வகுப்பறைகளை கொண்ட கட்டிடம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் திறக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே வகுப்பறையின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறை வராண்டாவின் மேற்கூரையிலும் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது.

கோரிக்கை

இந்தநிலையில் நேற்று மாணவர்கள் வகுப்பறையில் இல்லாத போது பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிெமண் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனால் மாணவ-மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். திறப்பு விழா கண்ட 20 நாட்களில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

புதிய பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்