தொழிலாளி குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரணம்
மழையால் வீடு இடிந்து சேதம் அடைந்த தொழிலாளி குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம் கொத்தன்குளம் தெருவைச் சேர்ந்தவர் சிவன். தொழிலாளியான இவரது ஓட்டு வீடானது சமீபத்தில் பெய்த மழையில் சேதம் அடைந்தது. அப்போது யாரும் அருகில் இல்லாததால் காயமின்றி தப்பினர். இதையடுத்து தகவலின் பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா பார்வையிட்டு சேதமான வீட்டுக்கு அரசு சார்பில் நிவாரண தொகையாக ரூ.4,100 மற்றும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, காய்கனிகளை வழங்கினார். அப்போது வருவாய் ஆய்வாளர் பாலா, கிராம நிர்வாக அலுவலர் செல்வலட்சுமி, ஊராட்சி செயலர் சுடலையாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.