அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-21 17:58 GMT

காட்பாடி காந்திநகரில் அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள், கல்லூரியின் நுழைவாயில் முன்பு நேற்று மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும், பழங்குடியின பெண்களை கொடுமைப்படுத்திவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மாணவ, மாணவிகள் பல்வேறு கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் திரளாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்