கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த அரசு மருத்துவமனை டாக்டர்கள்
கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணிபுரிந்தனர்.;
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் பெண் டாக்டரை வாலிபர் ஒருவர் கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். மேலும் அவர்கள் டாக்டர்கள், செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.