"கவுரவ விரிவுரையாளர்களை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை" - அமைச்சர் பொன்முடி

கவுரவ விரிவுரையாளர்களை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.;

Update: 2022-10-13 00:31 GMT

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிலைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்ததாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் வலம் வரும் நிலையில், கல்லூரி கல்வி இயக்குனர் அப்படி ஓர் ஆணை பிறப்பிக்கவில்லை என்று உயர்கல்வித் துறை செயலாளர் முனைவர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில் கவுரவ விரிவுரையாளர்களை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 ஆயிரம் விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும், அதில் 1,895 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நேர்முக தேர்வில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்