பொள்ளாச்சியில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்்த அரசு ஊழியர்கள்
பொள்ளாச்சியில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்்த அரசு ஊழியர்கள்
பொள்ளாச்சி
விதிமுறைப்படி முதுநிலை வருவாய் ஆய்வாளர் காலிபணியிட மதிப்பீடு அறுதியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை பறிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். பொள்ளாச்சி தாலுகா அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகத்திலும் அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்திருந்தனர். இதேபோன்று ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை தாலுகா அலுவலகங்களிலும் வருவாய் துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.