ஓட்டப்பிடாரத்தில் அரசு ஊழியர் சங்க கூட்டம்
ஓட்டப்பிடாரத்தில் அரசு ஊழியர் சங்க வட்டார பேரவை கூட்டம் நடந்தது.;
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டார பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தேவசகாயம் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் அன்னம்மாள் வரவேற்று பேசினார். கூட்டத்தை மாநில சேயற்குழு உறுப்பினர் அன்புசெல்வன் தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை செயலாளர் திருமாலை சமர்ப்பித்தார். கூட்டத்தில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் தமிழரசன், வட்டாரப் பொருளாளர் மாரியப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ப்ரீமேன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர்குமார் நன்றி கூறினார்.