அரசு ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்-ஆர்ப்பாட்டம்

திருச்சியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

Update: 2023-03-28 19:35 GMT

திருச்சியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். 6 லட்சம் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் மாநில அளவில் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பணிகள் பாதிப்பு

அதன்படி நேற்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஊழியர்கள் வேலைக்கு வராததால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி நிறைவுரையாற்றினார். இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்