நெல்லியாளம் டேன்டீயில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லியாளம் டேன்டீயில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்;
பந்தலூர்
டேன்டீ அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி அன்று சட்டசபையில் நடந்த வனத்துறை மீதான மானிய கோரிக்கையில் 7-வது ஊதியகுழு பரிந்துரையின்படி ஊதியம் நடைமுறைபடுத்த அரசாணை வெளியிடப்படடு அதனை நடைமுறை படுத்த ரூ.6 கோடி தமிழக அரசால் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுநாள் வரை டேன்டீ நிர்வாகம் அதனை நடைமுறை படுத்தாமல் ஊழியர்களை ஏமாற்றி வருவதை கண்டித்து நெல்லியாளம் டேன்டீ கோட்ட அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கபொது செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் வருகிற 17-ந்தேதி குன்னூர் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று டேன்டீ ஊழியர்கள் தெரிவித்தனர்.