அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-10 18:45 GMT

விழுப்புரம்

முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தேசிங்கு வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி நிறைவுரையாற்றினார். இதில் நிர்வாகிகள் அன்பழகன், அசோகன், சிவக்குமார், நடராஜன், சாருமதி, மகேஸ்வரன், காந்திமதி, ஆதிசங்கரன், வேங்கடபதி, கோவிந்தராஜிலு, திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்