நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-08-23 20:29 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். விடுபட்ட உரிமைகளான மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். உதவி இயக்குனர், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் நிலை பதவி உயர்வு ஆணைகளை காலதாமதம் இன்றி வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் கார்த்திகேயன், துணை செயலாளர் நீல பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் விஜி, உதயாரோகிணி, லிப்டின்மேரி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்