அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள பல்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். பழைய ஓய்வூதவி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து துறைகளிலும் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.