அரசு ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்
அரசு ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நிர்வாகிகள், சங்கத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.