அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.;
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் வளன் அரசு, அரியலூர் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில துணை தலைவர் ஜெயராஜாராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். சி.பி.எஸ்-ஐ ரத்து செய்ய வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.