அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-10 21:32 GMT

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு நேற்று அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சங்க மாவட்ட தலைவர் முகமது ரபீக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோலப்பன், பொருளாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் ராமசுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுகின்ற டாக்டர்களின் பணி நேரத்தை உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே இருந்தது போல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் ரவி, முருகன், கார்த்திக்பிள்ளை, குமார்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்