அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-08-10 18:25 GMT

நாகர்கோவில்:

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கான பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருந்ததை தற்போது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என நேரத்தை அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். குமரி மாவட்ட குட்டக்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஆலன் மேஜரின் இடமாற்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க குமரி மாவட்ட தலைவர் டாக்டர் பிரின்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராஜேஷ், துணைத் தலைவர் பிரதீப் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.‌ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்