அரசு மருத்துவர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

வாணியம்பாடியில் அரசு மருத்துவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-01 18:08 GMT

தமிழ் நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடிக்கு வருகை தந்தார். அவரை திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர்கள் தே.செந்தில்குமார், எஸ்.பசுபதி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு மாநில அளவிலான அரசு மருத்துவர்கள் சங்க பணிகள், மற்றும் நிர்வாகம் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட சிவசுப்பிரமணிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி அரசு டாக்டர்கள் டேவிட், விமல் குமார், பார்த்திபன், நேதாஜி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்