வாகனம் மோதி அரசு கல்லூரி பேராசிரியை படுகாயம்

ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி அரசு கல்லூரி பேராசிரியை படுகாயம் அடைந்தார்.

Update: 2023-10-08 19:15 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி ராணி (வயது 60). இவர் ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் செந்துறை செல்வதற்காக ராணி தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குவாகம் பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது ஸ்கூட்டரில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராணியை அப்பகுதி மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்