அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா
குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது;
குத்தாலம்:
குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குனர் வீரமணி, கணிதவியல் துறை தலைவர் பட்டாபிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறைத்தலைவர் ஞானஜெயந்தி வரவேற்றார். இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பேராசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் குத்தாலம் தாசில்தார் சரவணன், கல்லூரி அலுவலக நிதியாளர் முருக பாலாஜி, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அதிகாரி ராஜ்மோகன் உள்ளிட்ட கவுரவ விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.