அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பூம்புகார் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார்

Update: 2022-06-23 18:23 GMT

திருவெண்காடு:

பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் அறிவொளி தலைமை வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம்,கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன், கல்லூரி செயலாளர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். விழாவில் ஒன்றிய குழுதலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் சசிகுமார், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்