அரசு பஸ்- லாரி மோதல்; ஒருவர் பலி

அரசு பஸ்- லாரி மோதல்; ஒருவர் பலி

Update: 2022-07-28 15:17 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ராஜபாளையம் மலையடிப்பட்டி தெருவை சேர்ந்தவர் அருண் பாண்டியன். அதே பகுதியைச் சேர்ந்தவர் கற்பகவேல்(வயது 22). இவர்கள் 2 பேரும் சரக்கு வேனில் லோடு ஏற்றிக்கொண்டு மதுரை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வன்னியம்பட்டி அருகே வரும்போது மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்த அரசு பஸ், சரக்கு வேன் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி வேன் கவிழ்ந்ததில் வேனில் இருந்த கற்பகவேல் அதே இடத்தில் பலியானார்.

இதுகுறித்து அருண்பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் காரியாபட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செல்வகுமார்(47) மீது வழக்குப்பதிவு செய்து வன்னியம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்